Categories
உலக செய்திகள்

“அய்யய்யோ..!” கட்டுப்பாட்டை இழந்த சீன ராக்கெட்.. எந்த நேரத்திலும் பூமியில் விழலாம்..!!

சீனா, விண்ணில் ஏவிய ராக்கெட் கட்டுப்பாடின்றி பூமியை சுற்றிவருவதால் எந்த நேரத்திலும் பூமியில் விழலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இடம்பெற்றிருந்தது. ஆனால் இதில் சீனா இடம்பெறாததால், தங்களுக்கென்று தனி விமான நிலையத்தை உருவாக்கும் பணியை மேற்கொண்டுள்ளது. அதாவது இந்த நிலையம் பூமிக்கு மேல் சுமார் 370 கிலோ மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட இருக்கிறது.

இந்த விண்வெளி நிலையத்தின் முதல் தொகுதியை, சீனா கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி அன்று லாங் மார்ச் 5பி என்ற ராக்கெட் மூலமாக விண்ணில் ஏவியுள்ளது. இந்த தொகுதி சுமார் 21 டன் எடை உடையது. இந்த ராக்கெட்டின் பாகம் தற்போது கட்டுப்பாடின்றி பூமியை சுற்றிக்கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் SpaceNews என்ற ஊடகத்தில், அடுத்த சில தினங்களில் இந்த ராக்கெட்டின் பாகங்கள் பூமியில் எந்த பகுதியிலும் விழலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ராக்கெட்டின் பாகம் 100 அடி உயரம் மற்றும் 16 அடி அகலம் உடையது. எனவே இது பூமியினுள் நுழைந்தால் வளிமண்டல உராய்வினால் எரிந்து சிதையும்.

இதனால் பூமியில் அதிக அளவில் சிதைவுகள் விழுவதற்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த ராக்கெட்டின் பாகங்கள் எப்போது எங்கு விழப்போகிறது? என்பதை நிர்ணயிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |