Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பெயிண்டிங் வேலைதான் செய்ய வந்தாங்க…. அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர்…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறையினர்….!!

பெயிண்டிங் தொழில் செய்ய சென்ற வீட்டில் 11 பவுன் நகையை திருடியவரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் செல்வம்-நிறைமதி தம்பதியினர். நிறைமதி தனியார் பள்ளியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களுடைய வீட்டில் பெயிண்ட் அடிக்கும் பணி நடைபெற்றது. அந்த சமயத்தில் அவருடைய வீட்டில் பீரோவில் வைத்திருந்த 11 பவுன் நகை காணாமல் போயிருந்தது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வீட்டில் பெயிண்டிங் தொழில் செய்த அனைவரையும் அழைத்து விசாரித்தனர். இந்த விசாரணையில் திருமங்கலத்தை சேர்ந்த புஸ்பராஜ் என்பவர் நகையை திருடியது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 11 பவுன் நகையை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |