தமிழ் நடிகை சுருதி மேட்ரிமோனியில் தனது கைவரிசை காட்டியுள்ளார்.
சென்னையை சேர்ந்த பாலமுருகன் என்பவர் ஜெர்மனியில்வேலைபார்த்து வருகிறார்.
இந்நிலையில் மேட்ரிமோனியில் திருமணத்திற்காக தனது தகவல்களை வெளியிட்டிருந்தார். இதன் மூலம் ”ஆடி போனா ஆவணி” படத்தில் கதாநாயகியாக நடித்த சுருதி என்ற இளம் பெண்ணுடன் நெருக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் திடீரென ஒருநாள் சுருதி தன் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை என்றும் மருத்துவமனை செலவுக்காக பாலமுருகனிடம் 45 லட்சம் பணம் கேட்டுள்ளார்.
இதையடுத்து வருங்கால மனைவிதானே என்று கேட்டப்பணத்தை கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிய சுருதி சில நாளிலையே பாலமுருகனின் தொடர்பை துண்டித்துள்ளார். இதனால் ஏமாற்றம் அடைந்த பாலமுருகன் போலீசாரிடம் புகார் அளித்தார்.மேலும் வழக்கு பதிவு செய்த போலீசார் சுருதி மற்றும் அவரது வளர்ப்பு தந்தை, தாய் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சுருதி பல வெளிநாட்டு தமிழர்களை ஏமாற்றியுள்ளார் என்பது தெரிந்தது. அதன் பின் மோசடி வழக்கில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து ஜாமினில் வெளிவந்த சுருதி என்னை பற்றி தவறாக செய்திகளும், புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வருவதாக நீதிமன்றத்தில் புகார் அளித்தார். மேலும் நீதிமன்றம் அவரது கோரிக்கை மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் போலீசாரிடம் உத்தரவிட்டது.