Categories
சினிமா தமிழ் சினிமா

‘2 மாதத்தில்’ ‘3 படங்கள்’… மகிழ்ச்சியில் துள்ளிகுதிக்கும் தனுஷ் ரசிகர்கள்..!!

செப்டம்பர் 6 ,அக்டோபர் 4, 26 என அடுத்தடுத்த தேதிகளில் நடிகர் தனுஷின் படங்கள் வெளியாக இருப்பதால் ரசிர்கர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். 

மூன்று வருடங்களுக்கு முன்பு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தொடங்கப்பட்ட என்னை நோக்கி பாயும் தோட்டாவின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில்,  இன்றளவும் வெளியாகாமல் நிலுவையில் இருந்து வருகிறது. இப்படம் வெளியாகுமா? ஆகாதா? என்ற ஏக்கம் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வந்த பட்சத்தில் படத்தை வெளியிடுவதில்  ஏகப்பட்ட சிக்கல்கள் இருப்பதாக கூறப்பட்டது.

Image result for enpt asuran pattas

இந்நிலையில் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் படத்தயாரிப்பு நிறுவனமான ondraga entertaiments ஆகியோர் இணைந்து சில நிபந்தனைகளுடன் அனைத்து பிரச்சனைகளையும் முடித்து வைத்தனர். இதையடுத்து வருகின்ற செப்டம்பர் 6 ஆம் தேதி படத்தை திரையில் வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அக்டோபர் 4 அசுரன் திரைப்படமும், அதே மாதம் தீபாவளி அன்று பட்டாஸ்  திரைப்படமும் வெளியாக இருப்பதால் தனுஷ் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக செப்டம்பர் அக்டோபர் மாதங்கள் அமைந்துள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories

Tech |