ராணிப்பேட்டையில் கலெக்டர் அலுவலகத்தினை கட்டும் பணியில் ஈடுபட்டு வந்த வடமாநில வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் எம்.பி.டி ரோட்டில் புதிதாக கலெக்டர் அலுவலகத்தினை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணிகளில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஜோக்கர் முர்மு என்கின்ற வாலிபர் கட்டிட வேலையை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் அங்கேயே சக தொழிலாளர்களுடன் தங்கி பணிபுரிந்து வந்தார். இதனையடுத்து அவர் திடீரென்று இறந்து கிடந்துள்ளார்.
இதுகுறித்து ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அப்புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு மேற்கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.