ராணிப்பேட்டையில் கொரோனா நோயாளிகள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மருத்துவமனைகளிலும், கொரோனாவிற்காக மையம் அமைக்கப்பட்டு அங்கேயும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் அமைந்திருக்கும் தனியார் கல்லூரியில் தொற்றின் சிகிச்சைக்கான மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் உணவுகள் தரமாக இல்லை என்றும், கழிவறை சுத்தமாக இருப்பதில்லை என்றும் கூறி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின் அவர்கள் அனைவரும் கலைந்து சென்று மீண்டும் தொற்றிற்கான சிகிச்சையை பெற்றுள்ளனர்.