பிரான்சில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஜூன் மாதம் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என விஞ்ஞானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகில் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரான்ஸில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து இருப்பதால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் உணவகங்கள்,தேநீர் விடுதிகள் முதலியவை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பேராசிரியரும், ஆராய்சியாளருமான பஸ்கால் கிரெப்பே கூறுகையில் இதேபோல் உணவு விடுதிகளில் கூட்டம் நீடித்தால் பிரான்ஸ் ஜூன் மாதம் பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என்றும் உணவகங்களில் முகக் கவசங்கள் இல்லாமல் சாப்பிட்டு வருவதால் கொரோனா பரவல் அதிகரித்து நாடு பெரும் விளைவை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.