தக்கலை, மார்த்தாண்டம் போன்ற பகுதிகளில் கோவில் மற்றும் வீடுகளில் புகுந்து கொள்ளையடித்த கேரள கொள்ளையரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை, மார்த்தாண்டம் பகுதிகளில் வீடு மற்றும் கோவில்களில் புகுந்து நகை கொள்ளையடிக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வந்துள்ளது. இதனால் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ள நபர்களை பிடிப்பதற்காக காவல்துறை அதிகாரி ராமச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைத்து, தக்கலை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்றுகொண்டிருந் ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தபோது, அவர் கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் காட்டாக்கடை பகுதியில் வசித்து வரும் அபிலன்ராஜ் என்பது தெரியவந்துள்ளது.
இவர் மீது ஏற்கனவே கேரள குமரியில் பல்வேறு கொள்ளை வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தக்கலை பகுதியில் பூட்டியிருக்கும் வீடு மற்றும் கோவில்களில் கொள்ளையடித்து வந்துள்ளார். இதில் தக்கலை அம்மன் கோவில் சந்தித்து தர்ஹாரோட்டை சார்ந்த காண்டிராக்டர் முகமது சலீம் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார். மேலும் முத்தலக்குறிச்சியை சேர்ந்த பல்வேறு இடங்களில் கொள்ளையடித்து வசதியாக வாழ்ந்து வந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அபிலன்ராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவரிடம் இருந்த 25 பவுன் திருட்டு நகைகளை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.