இந்தியாவில் கொரோனாவிற்கு மக்கள் மட்டுமே பாதிக்கப்பட்ட வந்த நிலையில் ஹைதராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்காவில் 8 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக கொரோனா நோய் பரவல் மக்களை பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளது.சில மாதங்களாக இதனின் தாக்கம் குறைந்து நிலையில் மீண்டும் 2-வது அலையாக பாதிப்பு அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது. இதனால் நாளொன்றுக்கு இந்தியாவில் 3.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாமல், ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு அதிக அளவில் உயிர் இழப்பு நேரிடுகிறது.
இந்நிலையில் மக்களை தாக்கி வரும் கொரோனா மிருகங்களையும் விட்டு வைக்கவில்லை. ஹைதராபாத் நேரு உயிரியல் பூங்காவில் உள்ள மிருகங்களுக்கும் கொரோனா நோய்தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அங்குள்ள 8 ஆசிய சிங்கங்கள் உடல்நிலை சரி இல்லாமல்,உணவு உட்கொள்ளாமல், சுறுசுறுப்பு தன்மையை இழந்து காணப்பட்டதால் குழப்பமடைந்த பணியாளர்கள் ஆர்.டி.பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட சிங்கங்கள் தனிமைப்படுத்தப்பட்டு அதன் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாக ஹைதராபாத் நேரு உயிரியல் பூங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.