‘அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த கையோடு சூப்பர் ஸ்டார் ரஜினி அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினி தற்போது சிறுத்தை சிவா இயக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இமான் இசையமைக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாதில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் சென்னை திரும்பும் ரஜினி இப்படத்தின் டப்பிங் பணிகளை முடித்துவிட்டு உடனடியாக அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார். ஏனென்றால் அவர் தன் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல உள்ளார் என்று தெரியவந்துள்ளது.