பிரபல நடிகை ராகுல் பிரீத் சிங் நிம்மதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரகுல் பிரீத் சிங். இவர் தற்போது கமலின் இந்தியன்2, படத்திலும் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் கூறியதாவது, கடந்த சில வருடங்களாக ஹிந்தி மற்றும் தெலுங்கு நடிகருடன் என்னை இணைத்து பேசி வந்தனர்.
இவைகள் அனைத்தும் பொய்யான செய்தி என்பதால் நான் இதற்கு பதில் அளிக்கவில்லை. அந்த சமயத்தில் நான் மௌனமாக இருந்ததால் அந்த வதந்திகள் காணாமல் போய்விட்டது. இப்போது என்னைப் பற்றி எந்த ஒரு காதல் கிசுகிசுக்களும் பேசப்படுவதில்லை. இது எனக்கு நிம்மதியை தருகிறது என்று கூறியுள்ளார்.