பாம்பு கடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள புரசைவாக்கம் பகுதியில் முத்து என்ற முதியவர் வசித்து வந்தார். இந்நிலையில் முத்துவின் வீட்டிற்குள் நுழைந்த பாம்பு எதிர்பாராவிதமாக அவரை கடித்துவிட்டது. இதனால் ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிக்சை அளிக்கப்பட்ட பிறகு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்ட முத்துவிற்கு மருத்துவர்கள் அளித்த சிகிக்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இவ்வாறு பாம்பு கடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.