புதுக்கோட்டை மாவட்டத்தில் குற்ற வழக்கு தொடர்பாக குற்றவாளியை வருகிற 28 ஆம் தேதிக்குள் கோர்ட்டில் ஆஜராக வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது கடந்த 2009 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள உடையாளிப்பட்டி காவல் நிலையத்தில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த குற்ற வழக்கு தொடர்பாக கீரனூர் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஆனால் இதுவரை அவர் ஆஜராகாமல் தலை மறைவாக இருந்து வருகின்றார்.
இந்நிலையில் செல்வராஜை தேடப்படும் குற்றவாளியாக கீரனூர் நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார். மேலும் வருகிற 28 ஆம் தேதிக்குள் கீரனூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்று நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.