சத்துக்கள் நிறைந்த கறிவேப்பிலை சாதம் செய்வது எப்படி ..
தேவையான பொருட்கள் :
பச்சரிசி – 1/4 கிலோ
கறிவேப்பிலை – 1 கைப்பிடி அளவு
கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
முந்திரிப் பருப்பு – தேவையானஅளவு
கடுகு – சிறிதளவு
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
நெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
முதலில் பச்சரிசியை உதிரியாக வேக வைத்து கொள்ள வேண்டும். ஒரு கடாயில் சிறிதளவு நெய் விட்டு கறிவேப்பிலையை போட்டு மொறுமொறுப்பாக வறுத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.பின் மற்றொரு கடாயில் நெய்யை விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு , முந்திரிப் பருப்பு , கடலைப் பருப்பு போட்டு தாளித்து , சாதத்துடன் கலந்து கறிவேப்பிலைத்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து கிளறி பரிமாறினால் சுவையான கறிவேப்பிலை சாதம் தயார் !!!