Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 10, 72, 279 லட்சம் ரூபாய்… வசமாக சிக்கிய வாலிபர்… கோவையில் பரபரப்பு…!!

டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து 10 லட்சத்தில் 72 ஆயிரத்து 279 ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆர்.எஸ் புரம் லாலி ரோடு சந்திப்பு பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்நிலையில் இந்த மதுக்கடையில் கண்காணிப்பாளரான வேலுசாமி என்பவர் கடந்த 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் வசூலான 10 லட்சத்து 72 ஆயிரத்து 279 ரூபாயை கடையின் உள்ளே வைத்து பூட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு சமயத்தை பயன்படுத்தி மது கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கு இருந்த 10 லட்சத்து 72 ஆயிரத்து 279 ரூபாயை கொள்ளை அடித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து அறிந்த கடையின் கண்காணிப்பாளர் ஆர்.எஸ் புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து, டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடியுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினருக்கு சீரநாயக்கன்பாளையம் பகுதியில் வசிக்கும் குமார் என்பவர் மது கடையின் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. அதன் பின் அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 7 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து விட்டனர். மேலும் காவல்துறையினர் வேறு யாருக்கும் இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருக்கின்றதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |