Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

யாருமில்லா நேரத்தில்…. காதல் கணவரின் செயல்… மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

காதல் திருமணம் செய்து கொண்டவர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் ராமமூர்த்தி என்ற பெயிண்டர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜோதிமணி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் தனது வீட்டில் தனியாக இருந்த ராமமூர்த்தி திடீரென மதுவில் மஞ்சள் நிற சாணி பவுடரை கலந்து குடித்து தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த மேட்டுப்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து ஜோதிமணி மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராமமூர்த்தி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |