கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
உலகெங்கிலும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிகமாக பரவிவரும் காரணத்தால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் அதிக அளவில் கொரோனா பரவிவருவதால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அங்கு 12,898 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் 12,197 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். ஆனால் 114 பேருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தொற்றுக்கு பலியாகி விட்டனர். இதனை அடுத்து 567 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்த முடிவு வெளிவந்தன. அதில் 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவர்களை கொரோனா நோய் சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். இதனால் கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதிகளில் கொரோனா தொற்று பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,037 ஆக அதிகரித்துள்ளது.