கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
உலகெங்கிலும் கொரோனாவின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வரும் நிலையில் அதிகப்படியான கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனை அடுத்து நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சலூன் கடைகளை திறப்பதற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பகுதியில் இருக்கும் சலூன் கடைகள் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக நகராட்சி ஆணையாளர் முத்துவுக்கு தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் படி நகராட்சி அதிகாரிகள் கோவில்பட்டி மற்றும் பொத்தமேட்டுப்பட்டி போன்ற பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அரசு விதித்த தடையை மீறி 3 சலூன் கடைகளை திறந்து வைத்திருப்பதை அதிகாரிகள் பார்த்துள்ளனர். இதனையடுத்து அதிகாரிகள் கட்டுப்பாடு மீறி செயல்பட்டதால் அந்த கடைககளை பூட்டி சீல் வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுயுள்ளது.