பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி மார்டன் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது . அந்த வகையில் தற்போது சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் மற்ற தொலைக்காட்சி சீரியல்களை பின்னுக்குத் தள்ளி டி.ஆர்.பி-யில் முன்னிலையில் இருந்து வருகிறது. மேலும் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் ரோஷினி அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் ரோஷினி மாடர்ன் உடையில் போஸ் கொடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது. தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.