Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பதறி சத்தம் போட்ட பெண்… மடக்கி பிடித்த பொதுமக்கள்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

அம்மா உணவக ஊழியரிடம் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் பகுதியில் செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆழ்வார் திருநகர் பகுதியில் இருக்கும் அம்மா உணவகத்தில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் செல்வி பணி முடிந்து வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் சென்ற மர்ம நபர் ஒருவர் செல்வியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து செல்வியின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அந்த நபரை மடக்கிப் பிடித்து விட்டனர்.

அதன்பின் பொதுமக்கள் அவரை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த நபர் ஜெயக்குமார் என்பதும், ஜெயக்குமாரின் மீது ஏற்கனவே காவல் நிலையங்களில் பல திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடம் இருந்த தங்க சங்கிலி மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |