இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது.
எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை நிலவரம் உறைய வைக்கிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியிலேயே ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.
இதனால் கொரோனாவால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் செங்கல்பட்டு மருத்துவமனையில் 11 பேர் உயிரிழந்த நிலையில் நாடு முழுவதும் 581 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை அமைப்பதற்கான இடங்களை அரசு அடையாளம் கண்டுள்ளதாகவும், இதற்கான கட்டுமான பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள இருப்பதாகவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.