தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே இரண்டாம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் திமுக கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஆளுநரிடம் இன்று முதலமைச்சராக பதவியேற்க உரிமை கோரினார். இதனையடுத்து ஆளுநரும் முறைப்படி தமிழகத்தில் ஆட்சி அமைக்க ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவிற்கு 4 இடங்களில் 20 வருடங்களுக்கு பிறகு வெற்றி வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதை பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் பாஜக நுழைந்து விட்டது என்று அக்கட்சியின் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். பாஜக எம்எல்ஏக்கள் 4 பேர் சட்டப்பேரவைக்குள்ளே நுழைய உள்ளனர். இனி பல மாற்றங்களை சந்திக்க நேரிடும் என்று கூறியுள்ளார். மேலும் மேற்கு வங்கத்தில் பயங்கரவாத செயல்களில் மம்தா ஈடுபட்டு வருவதாகவும் அவரை கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் தொடரும் என்றும் கூறியுள்ளார்.