2021 ம் ஆண்டு ஐபில் தொடரின் ,மீதமுள்ள போட்டியை செப்டம்பர் மாதத்தில் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது .
14 வது ஐபிஎல் தொடரானது கடந்த மாதம் 9-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகரித்து வந்த நிலையில் , ரசிகர்களுக்கு அனுமதி இன்றி பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி பயோ பாதுகாப்பு வளையத்திற்குள் ,போட்டிகள் நடைபெற்று வந்தன. ஆனால் 30வது லீக் போட்டியில் கொல்கத்தா அணி பந்துவீச்சாளர்கள் இருவருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்றால் ,அன்று நடைபெற இருந்த போட்டி ரத்தானது. இதைத்தொடர்ந்து மேலும் பல வீரர்களுக்கு தொற்று ஏற்பட்டதால், ஐபிஎல் போட்டிகளை காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ நேற்று அறிவித்தது.
ஆனால் போட்டி எப்போது நடைபெறும் என்று தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டதால் , போட்டி எப்போது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.எனவே வெற்றிகரமாக 29 லீக் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் ,தற்போது எஞ்சியுள்ள 31 போட்டிகளை நடத்துவதைப் பற்றி பிசிசிஐ ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இதனால் ஐபிஎல் போட்டியை நடத்துவதற்கு ஒரே ஒரு வாய்ப்பாக ,வருகின்ற செப்டம்பர் மாதம் மட்டும்தான் இருக்கிறது. எனவே செப்டம்பர் மாதத்தில் ஐபிஎல் போட்டியில், நடைபெறலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளன .
அதோடு உலகக் கோப்பைக்கான டி20 போட்டி நடைபெறுவதற்கு முன் ,செப்டம்பர் மாதத்தில் மூன்று வார இடைவெளி உள்ளது. எனவே இந்த மூன்று வார காலத்திற்குள், எஞ்சியுள்ள 31 போட்டிகளை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ உள்ளது. எனவே இந்த தொடரில் ஏற்பட்டுள்ள இழப்பை சமாளிக்க, பிசிசிஐ அடுத்த முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், மீதமுள்ள போட்டியை செப்டம்பர் மாதத்தில் நடத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல் வெளியிடப்படவில்லை.