நச்சுத்தன்மை கொண்ட காயை சமைத்து சாப்பிட்ட ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனியில் முனிச் நகரில் 48 வயதுடைய ஒரு நபர் வசித்து வந்தார். இவர் தாமே குழம்பு சமைத்து சாப்பிட வேண்டும் என்று நினைத்துள்ளார். அதனால் இவர் காட்டுப் பூண்டு என நினைத்து நச்சுத்தன்மை மிகுந்த தாய் ஒன்றை குழம்பில் சேர்த்துச் சமைத்துள்ளார். இவ்வாறு பூண்டு போலவே இருக்கும் அந்த காய் மிகவும் நச்சுத்தன்மை உடையதாகும். இதனை மனிதன் சிறிய அளவு சாப்பிட்டால் உடனே இறந்துவிடும் நிலை ஏற்படும்.
இந்த நிலையில் அவர் அந்த குழம்பை சிறிதளவு சாப்பிட்டு உள்ளார். ஆனால் அவரது உடலில் ஏதோ மாற்றம் ஏற்படுவது போல தெரிந்தவுடன் அவர் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு உடனடியாக மருத்துவ உதவி குழுவினருக்கும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தெரிவித்துள்ளார். ஆனால் மருத்துவ உதவிக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னரே இவர் தரையில் சுருண்டு விழுந்துள்ளார்.
அதன்பின் சில நிமிடங்களில் மருத்துவ உதவி குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சில மணிநேரங்களிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் உள்ளூர் நிர்வாகம் இந்த காயை குறித்து பலமுறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.