Categories
உலக செய்திகள்

ஜி 7 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள்…. தொடங்கியது 2 நாள் மாநாடு…. விவாதிக்கப்படும் பல்வேறு பிரச்சனைகள்….!!

ஜி 7 நாடுகளின் வெளியுறவு மந்திரிகளின் 2 நாள் மாநாடு நேற்று தொடங்கியுள்ளது.

ஜி 7 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் இரண்டு நாள் மாநாடு தொடங்கியுள்ளது. அதாவது ஜி 7 என்றால் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய 7 பணக்கார நாடுகள் இணைந்த அமைப்பு ஆகும். தற்போது இந்த நாடுகளின் தலைவராக இங்கிலாந்து செயல்பட்டு வருகின்றது. இந்த ஜி 7 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் மாநாட்டுக்கு இங்கிலாந்து ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாடானது லண்டனில் உள்ள லங்காஸ்டர் ஹவுஸ் அரங்கத்தில் நேற்று தொடங்கியுள்ளது.

மேலும் மேற்கண்ட ஏழு நாடுகளுடைய வெளியுறவு மந்திரிகள் இதில்  கலந்து கொள்வர். இதைத்தவிர ஆஸ்திரேலியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளின் வெளியுறவு மந்திரிகளுக்கும் சில நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பு நடவடிக்கையாக அனைவருக்கும் கொரோனா  பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் அந்த மாநாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒவ்வொருவருக்கும் இடையே பிளாஸ்டிக் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் மியான்மர் ராணுவ புரட்சி, எத்தியோபியா பிரச்சனை, ஆப்கானிஸ்தானில் பன்னாட்டுப் படைகள் வெளியேறுவதால் உண்டாகும் சூழ்நிலை பிரச்சனை, உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்து, ரஷிய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி சிறையில் அடைக்கப்பட்டது, உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி கிடைக்க ஜி-7 நாடுகள் இடையே கருத்தொற்றுமை உருவாக்குவது ஆகிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |