ஆன்லைன் வகுப்புகளை சரியாக பின்பற்றாமல் இருப்பதை பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சௌரிபாளையம் பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் சினேகா என்ற மகள் இருந்துள்ளார். தற்போது கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் அனைத்து கல்லூரிகளும் இயங்க தடை விதிக்கப்பட்டு ஆன்லைன் மூலமாக மட்டுமே வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆன்லைன் பாடங்களை சினேகா சரியாக பின்பற்றாமல் இருந்ததால் அவரை பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இதனால் மன உளைச்சலில் இருந்த சினேகா தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சிங்காநல்லூர் காவல்துறையினர் இளம்பெண்ணின் தற்கொலை விவகாரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.