நாளை முதல் 20-ம் தேதி வரை பொதுமக்களுக்கு ரயில்களில் அனுமதி இல்லை என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு இதைத் தொடர்ந்து நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் நாளை முதல் பேருந்துகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து தெற்கு ரயில்வே நிர்வாகமும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க நாளை முதல் 20-ம் தேதி வரை 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதியளக்கப்பட்டுள்ளது. ரயிலில் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் அனுமதியளிக்கப்படும் பொதுமக்களுக்கு சென்னை புறநகர் ரயில்களில் அனுமதி இல்லை என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேநேரம் கல்வி நிறுவன ஊழியர்கள், மாணவர்களுக்கு அனுமதியளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.