செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் செல்வராகவன் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் . இதை தொடர்ந்து இவர் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியிருந்தார். இதன் பின் கடந்த 2016-ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை படம் உருவாகியது. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.
சில காரணங்களால் ரிலீஸாகாமல் இருந்த இந்த படம் கடந்த மார்ச் 5ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நெஞ்சம் மறப்பதில்லை படம் வருகிற மே 14ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் நானே வருவேன் திரைப்படம் உருவாகி வருகிறது.