Categories
விளையாட்டு

புரோ ஹாக்கி லீக் போட்டி: இந்திய அணியின் போட்டிகள் ஒத்திவைப்பு…!!!

இந்திய அணியின் அடுத்த 4 புரோ ஹாக்கி  லீக் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

இந்தியாவில் கொரோனா வைரஸின்  2ம் அலை  வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் 9 அணிகளுகிடையேயான  2-வது புரோ ஹாக்கி லீக் போட்டியானது ,ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி நாட்டில், இந்திய அணி எதிர்கொள்ள இருந்தது. ஆனால் ஐரோப்பிய கண்டத்திற்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் , இந்திய அணி அடுத்த 4 லீக்  போட்டிகளையும் தள்ளி வைக்கப்படுவதாக தெரிவித்ததுள்ளது .

இதை சர்வதேச ஹாக்கி சம்மேளனம் நேற்று அறிவித்தது. இதுவரை நடைபெற்ற புரோ ஹாக்கி லீக் போட்டியில், பெல்ஜியம் 32 புள்ளிகளை எடுத்து முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக ஜெர்மனி 19 புள்ளிகளை எடுத்து  2-வது இடத்தையும் , நெதர்லாந்து 18 புள்ளிகளை எடுத்து  3வது இடத்தையும் பெற்றுள்ளது . இந்தியா 15 புள்ளிகளை எடுத்து 4 வது இடத்தை பெற்றுள்ளது.

Categories

Tech |