Categories
லைப் ஸ்டைல்

ரொம்ப வருஷமா குழந்தை இல்லை என்ற கவலையா?…. இனி அந்த கவலை வேண்டாம்….!!!!

ஒவ்வொரு பெண்ணுக்கும் குழந்தை வரம் என்பது மிகப்பெரிய மகிழ்ச்சியை தரும். ஆனால் சிலருக்கு குழந்தை வரம் கிடைக்க காலதாமதம் ஏற்படுகிறது. அதிலும் சிலருக்கு மலட்டுத் தன்மை காரணமாக குழந்தை வரம் கிடைப்பதில்லை. இவ்வாறான பல பிரச்சனைகளை போக்க வீட்டிலேயே மருந்து தயாரிக்கலாம்.

அதன்படி ஆலம்பழத்தை பொடி செய்து இரண்டு சிட்டிகை ஆலம்பழம் பொடி, ஒரு சிட்டிகை பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை 40 நாட்கள் உண்டு வர பெண் மலடு நீங்கும். அடுத்ததாக வெல்லம் 200 கிராம், குப்பைமேனி சாறு 150 மில்லி, பெருங்காயம் பொரித்தது 3 கிராம், மூன்றையும் நன்றாக கலந்து புது மண் சட்டியில் ஊற்றி, வெள்ளைத் துணியால் மூடி இளம் வெயிலில் வைத்து மாதவிலக்கு காலத்தில் மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். இப்படி மூன்று முறை செய்தால் கருப்பை மலடு நீங்கும்.

பருத்திக் கொட்டை 50 கிராம் எடுத்து அரைத்து பால் எடுத்து நாட்டுக்கோழி முட்டை வெள்ளைக்கருவில் கலந்து சாப்பிட கருப்பை நீர் கட்டிகள் உடையும். அடுத்த மாதம் செப்பு நெருஞ்சில் வேர் பசும்பால் விட்டு அரைத்து சாப்பிட கரு தங்கும். இதனையடுத்து வேப்பிலை சாறு 150 மில்லி, ஆடாதொடை சாறு 100 மில்லி, தேங்காய் எண்ணெய் 100 மில்லி, நல்லெண்ணெய் 500 மில்லி சேர்த்து பக்குவமாக காய்ச்சி வடித்துக் கொள்ளவும். இதனை 12 நாட்கள் உள்ளுக்கு சாப்பிட பெண்ணுக்கு கர்ப்பம் தரிக்கும். விலக்கான 3 நாட்களும் இரவு பட்டினி இருந்தும், காலை தாமரைப் பூவை பாலில் அரைத்து குடித்து வர குழந்தை தங்கும்.

Categories

Tech |