ராணுவ வீரர்கள் சேர்ந்து 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திர பிரதேச மாநிலத்தில், ஹத்ராஸில் 16 வயது சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த முகேஷ் என்ற ராணுவ வீரர் ஒருவர் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார், இவரது நெருங்கிய நண்பர் சவுரப் என்பவரையும் அவர் அழைத்து வந்துள்ளார். இருவரும் சேர்ந்து ஒன்றாக ஒரே வீட்டில் இருந்து வந்துள்ளனர். 16 வயது சிறுமி தனது தோழி வீட்டிற்கு சென்றுவிட்டு இரவில் தனியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது தெருவில் யாரும் இல்லாத நேரம் பார்த்து முகேஷும் அவரது நண்பர் சவுரவ் சிறுமியை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று கதற கதற பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். தனக்கு நடந்ததை அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் அந்த நபர்களின் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த நிலையில் மற்றொரு குற்றவாளியான சவுரப் ஓடிவிட்டார்.