பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்த சம்பவம் வியப்iiபை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்க நாட்டில் மாலி பகுதியில் நேற்று 25 வயதுள்ள ஹலீமா சிஸே என்ற பெண் வசித்து வருகிறார். இவர் சில மாதங்களுக்கு முன் கர்ப்பமாக இருந்தார். இந்த கர்ப்பத்தை சோதனை செய்த டாக்டர்களுக்கு வியப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது இவருடைய கர்ப்பத்தில் 7 குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது. அதன்பின் அவருடைய கடந்த மார்ச் மாதத்தில் மொராக்கோவிற்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின் நேற்று அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டபோது மருத்துவர்கள் அவருக்கு சிசேரியன் செய்து உள்ளனர். இதில் அவர் 9 அழகான குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். அதில் ஐந்து பெண் குழந்தைகள் மற்றும் நான்கு ஆண் குழந்தைகள் ஆகும். இதனை அடுத்து மருத்துவர்கள் புதிதாகப் பிறந்த 9 குழந்தைகள் மற்றும் தாய் நலமாக இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளனர்.