கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருவதால் திருச்சி மாவட்டத்தில் மேலும் 4 பேர் பலியாகியுள்ளனர்.
உலகெங்கிலும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. மேலும் புதிதாக 4 நோயாளிகள் உயிரிழந்துயுள்ளனர். இந்நிலையில் அம்மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 232 ஆக அதிகரித்துள்ளது. இதனை அடுத்து இந்த மாவட்டத்தில் 3410 பேர் கொரோனா தொற்று சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் புள்ளம்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட வீரகாலூர், கோவாண்டாகுறிச்சி, கல்லக்குடி மற்றும் புள்ளம்பாடி போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
அந்த பரிசோதனையில் வீரகாலூர் கிராமத்தில் 7 பேருக்கும், வடுகர்பேட்டை கிராமத்தில் எட்டு பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டடுள்ளது. ஆகையால் அவர்களை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும், அவர்களின் வீட்டில் தனிமைப்படுத்தியும் வைத்துள்ளனர். இந்நிலையில் மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி உத்தரவின்படி அந்த கிராமங்களை தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதனை அடுத்து அந்த கிராமங்களுக்கு வெளியிலிருந்து யாரும் உள்ளே செல்லக் கூடாது என்பதற்காக அங்கு செல்லும் வழியில் இரும்பு தகரம் கொண்டு சாலையை அடைத்துள்ளனர். இதனை அடுத்து ஸ்ரீராமசமுத்திரம் ஊராட்சியில் ஒரு நபருக்கும், காட்டுப்புத்தூர் பகுதியில் மூன்று நபருக்கும் மற்றும் தாரமங்கலம் கிராமப்புறத்தில் 5 பேருக்கும் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.