பல வருடங்களுக்கு முன் நடிகர் அஜித் காபி விளம்பரத்தில் நடித்த புகைப்படம் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்து வருகிறது . தற்போது நடிகர் அஜித் இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு 90% நிறைவடைந்துள்ளது. மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜித்தின் பிறந்த நாளில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் பல வருடங்களுக்கு முன் நடிகர் அஜித் காபி விளம்பரத்தில் நடித்த புகைப்படம் வெளியாகியுள்ளது.