தமிழகத்தில் நாளை முதல் 4 மணிநேரம் மட்டுமே டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு ஆகியவை அமலில் உள்ளது.
இதைத்தொடர்ந்து கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் நாளை முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்குவரும் நிலையில் டாஸ்மாக் கடைகளின் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை முதல் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.