இந்தியாவை நினைக்கும்போது இதயம் வலிக்கிறது என்று இங்கிலாந்தின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் வேதனை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, தடுப்பூசி, படுக்கை வசதி போதுமான அளவு இல்லாத காரணமாக பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன. இதை தொடர்ந்து பல நிறுவனங்களும் இந்தியாவிற்கு உதவி செய்ய முன்வந்துள்ளன.
இதைத்தொடர்ந்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் ஒரு கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் இந்தியாவை நான் மிகவும் நேசிக்கிறேன். தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா சிக்கி தவிப்பதை பார்க்கும்போது என் இதயம் வலிக்கிறது என்று வேதனை தெரிவித்துள்ளார். இந்த கடினமான காலத்தை எதிர்கொண்டு, இதிலிருந்து விரைவில் வலிமையாக மீண்டு வருவீர்கள் எனவும் ஆறுதல் தெரிவித்துள்ளார்.