உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் குறித்து ஏற்கனவே எச்சரித்ததாக மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, தடுப்பூசி, படுக்கை வசதி போதுமான அளவு இல்லாத காரணமாக பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன. இதை தொடர்ந்து பல நிறுவனங்களும் இந்தியாவிற்கு உதவி செய்ய முன்வந்துள்ளன.
இந்நிலையில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் குறித்து மார்ச் மாதமே மத்திய அரசை எச்சரித்ததாக மத்திய மூலக்கூறு உயிரியல் மையத்தின் இயக்குனர் மருத்துவர் ராகேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார். நாங்கள் வரப்போகும் ஆபத்து குறித்து முன்னரே கூறினோம். அந்தச் செய்தி மோடியை எட்டவில்லை என்பதை நம்ப முடியவில்லை. தற்போது தொற்று அதிகம் பரவும் போது உருமாற்றமும் ஏற்படும். அதனால் பலி எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.