Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகம் முழுவதும்… தமிழக அரசின் அடுத்த அதிரடி உத்தரவு…!!

கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க மாவட்டங்களுக்கு ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள காரணத்தினால் தமிழக அரசு இவற்றை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு போன்றவை அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் மருத்துவமனைகளில் இடம் இல்லாத சூழ்நிலை உருவாகிக் கொண்டு வருகின்றது.

இதன் காரணமாக தமிழக அரசு தற்போது புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க மாவட்டங்களுக்கு ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஐபிஎஸ் அதிகாரி ஜெயராம், சாரங்கன் ஆகியோர்களும், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு ஐபிஎஸ் அதிகாரி வனிதாவையும், இதைத்தொடர்ந்து விழுப்புரம் கடலூர் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு ஐபிஎஸ் அதிகாரி பாண்டியனையும், சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு ஐபிஎஸ் அதிகாரி தினகரன் ஆகியோர நியமிக்கப்பட்டுள்ளனர்

Categories

Tech |