தமிழகத்தில் முதல்வராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் கொரோனா தடுப்பு பணி குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள காரணத்தினால் தமிழக அரசு இவற்றை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு போன்றவை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தமிழகத்தில் முதல்வராக மு.க.ஸ்டாலின் மே 7ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளார்.
இவர் பொறுப்பேற்ற உடன் அன்று மாலை 5 மணிக்கு மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் திருப்பூர் கோவை ஈரோடு நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு சஞ்சய் குமார் என்பவரும், அரியலூர் பெரம்பலூர் புதுகை கரூர் ஆகிய மாவட்டங்களுக்கு அமரேஷ் புஜாரி என்பவரும், தஞ்சை திருவாரூர் நாகை மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு லோகநாதன் என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.