தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 167 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள காரணத்தினால் தமிழக அரசு இவற்றை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு போன்றவை அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளும் தமிழகத்தில் அமல்படுத்த உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் ஒரே நாளில் 23,310 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 12 லட்சத்து 72 ஆயிரத்து 602 ஆக உயர்ந்துள்ளது. இதில் இன்று மட்டும் 20 ஆயிரத்து 062 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 167 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 779 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் ஒரே நாளில் 6,291 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.