பிரான்ஸ் பத்திரிகையாளரை மாலியில் ஜிகாதிகள் கடத்திய நிலையில், தன்னை விடுவிக்க அரசால் முடிந்தவற்றை செய்யுமாறு அவர் வலியுறுத்திய வீடியோ வெளியாகியுள்ளது.
பிரான்சை சேர்ந்த பத்திரிக்கையாளரான, Olivier Dubois பிரெஞ்சு பத்திரிகை Le Point மற்றும் Liberation செய்தித்தாளில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 2015-லிருந்து மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் தங்கியிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று பிரான்ஸ் அரசு என்னை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை செய்து வருவதாக அவர் கூறும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
https://twitter.com/rory_mckittrick/status/1389859917016838145
இதனை தொடர்ந்து பிரான்ஸ் வெளியுறவு துறை அமைச்சகத்தின் வட்டாரம், மாலியில் Olivier கடத்தப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் அவரது குடும்பத்தினருடன் தூதர்கள் பேசி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், “நான் Olivier Dubois. பிரான்ஸ் பத்திரிகையாளர்.
கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி அன்று JNIM ஜிகாதிகள், மாலியில் உள்ள Gao நகரில் என்னை கடத்திவிட்டார்கள். இதனால் என்னை விடுவிக்க, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பிரான்ஸ் அதிகாரிகள் தொடர்பிலிருந்து வருகிறார்கள். மேலும் தங்களால் முடிந்தவற்றை அவர்கள் செய்யவேண்டும் என்று கேட்டுள்ளார்.