Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘சொந்த ஊருக்கும் போக முடியாது’… ‘மேட்சும் விளையாட முடியாது’… தவிக்கும் ஆஸ்திரேலிய வீரர்கள் …!!

ஐபிஎல் தொடரில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் , சொந்த நாட்டிற்கு திரும்புவதில்  சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனோ தொற்றின் இரண்டாம் அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில், மக்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் தட்டுப்பாட்டால்,மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா  தொற்று அதிகரித்துள்ளதை தொடர்ந்து, இந்தியாவுடனான விமான போக்குவரத்திற்கு பல நாடுகள் தடை விதித்துள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலியா மே 15ஆம் தேதி வரை தடை நீடித்திருக்கிறது.

இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் வீரர்களுக்கு,  தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் நேற்று ஐபிஎல் போட்டி ,காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. இதனால் ஐபிஎல் போட்டியில் பங்குபெற்று உள்ள ,ஆஸ்திரேலிய வீரர்கள் சொந்த நாட்டிற்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் தற்போது ஆஸ்திரேலிய வீரர்கள் மாலத்தீவுக்கு செல்ல முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே ஆஸ்திரேலிய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் மாலத்தீவுக்கு செல்ல, டிக்கெட்டுகளை புக் செய்து உள்ளதாகவும், அங்கு சிறிது நாட்கள் ஓய்வுக்குப் பின் சொந்த நாட்டிற்கு செல்ல முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Categories

Tech |