Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இளம்பெண்ணை பற்றி அவதூறாக கூறி திருமணத்தை நிறுத்திய ஆசிரியர் கைது..!!

குறிஞ்சிப்பாடியில் இளம்பெண்ணை பற்றி அவதூறாக கூறி திருமணத்தை நிறுத்திய ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தின் சீர்காழி அருகே  மணல் அகரத்தை சேர்ந்த கலையழகனின் மகனான சிவஞானசம்பந்தம் (31) என்பவர், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இதையடுத்து அதே கல்லூரியில் படித்து வந்த  இளம்பெண்ணுடன் காதல் வயப்பட்டார். மேலும் இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர்.
Image result for student love
இந்நிலையில் அந்த பெண்ணின்  பெற்றோர்கள் வேறு மாப்பிள்ளை பார்த்தனர். இதையடுத்து கடந்த மாதம் 30-ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. மேலும் இளம் பெண்ணுக்கு விரைவில் திருமணம் நடக்க முடிவு செய்யப்பட்டது. இதை அறிந்த ஆசிரியர் சிவஞானசம்பந்தம், மாப்பிள்ளை வீட்டில் அந்த பெண்ணை  பற்றி தவறாக கூறி, இருவரும் காதலித்தபோது ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை மாப்பிள்ளையின் செல்போனுக்கு அனுப்பினார்.
Image result for poison suicide attempt
இந்நிலையில் அதிர்ச்சி அடைந்த மாப்பிள்ளை வீட்டார்கள், நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தி விட்டார்கள். இதனால் மனமுடைந்த அந்த பெண், தனது வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து குடித்துள்ளார். இதையடுத்து சிறிது நேரத்தில் வாயில் இருந்து நுரை வெளியேறியபடி மயங்கி விழுந்தார். இந்நிலையில் அவர் உடனடியாக சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
Image result for கைது
மேலும் இளம்பெண்ணின் தந்தை, ஆசிரியர் சிவஞானசம்பந்தத்தை சந்தித்து நியாயம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிவஞானசம்பந்தம், உனது மகளை  யாருக்காவது திருமணம் செய்து வைத்தால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதை பற்றி  மாணவியின் தந்தை, குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிவஞானசம்பந்தத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |