Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு …! உதவி செய்யும் இர்பான் பதான்…!!!

டெல்லியில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை  மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தொற்றால்  பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் ,மக்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. மருந்துகள் மற்றும் ஆக்சிசன் தட்டுப்பாட்டால் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக வட மாநிலங்களில் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக டெல்லியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்  இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் தெற்கு டெல்லியில் பகுதியில், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வந்துள்ளார்.

இதை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர் , தினமும் தெற்கு டெல்லி பகுதியில் தொற்றால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு , தன்னுடைய கிரிக்கெட் அகாடமி சார்பில் உணவு இலவசமாக வழங்கப்படும், என்று அவர் அறிவித்துள்ளார். அதோடு கொரோனா தொற்றால்  நாடு மிகவும் மோசமான நிலையை உள்ளது என்றும், இந்த தருணத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து உதவி செய்ய வேண்டியது நம்முடைய கடமையாகும் ,என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |