Categories
தேசிய செய்திகள்

அனைவருக்கும் நாளொன்றுக்கு ரூ.5000….. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது.

அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் தனியார் மருத்துவமனைகளில் ஐசியு பிரிவில் சிகிச்சை பெறும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள நோயாளிகளுக்கு நாளொன்றுக்கு 5 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என்று அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. அனைத்து மாநிலங்களும் இந்த முறையை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Categories

Tech |