Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே உடனே சென்னைக்கு போங்க…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடும் பணியும் பரிசோதனை எண்ணிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 23 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. அதனால் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்றுமுதல் மேலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி கொரோனா நோய் தடுப்பு பணியில் பணிபுரிய, ஆய்வக நுட்புனர்கள் மற்றும் ஊடுகதிர் தொழில் நுட்புணர்கள் நேரடியாக கல்வித் தகுதிக்கான அசல் சான்றிதழ்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளலாம். நேரம்: 10am to 5 pm
நாளில்: மே 6, 7
நேர்காணலுக்கு வர வேண்டிய முகவரி: சென்னை மாநகர நல சங்கம், பொது சுகாதாரத் துறை, பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் மாளிகை, சென்னை -600003

Categories

Tech |