மினி பேருந்தும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் அதிஷ்டவசமாக ஒருவர் உயிர் தப்பி விட்டார்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஓட்ட கோவில் பகுதியில் சத்தியசீலன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் சத்தியசீலன் தலைக்கவசம் அணிந்து கொண்டு அரியலூருக்கு பகுதிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து செல்லியம்மன் கோவில் பகுதியில் சத்தியசீலன் சென்றுகொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக சென்ற மினி பேருந்து இவரின் மோட்டார் சைக்கிளின் மீது மோதி விட்டு நிற்காமல் அங்குள்ள கால்வாய் பகுதியில் இறங்கி நின்று விட்டது .
இந்த விபத்தில் சத்தியசீலன் காயமடைந்தார். இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டு உள்ளதாகவும் உயிர்க்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தை ஏற்படுத்திய மினி பேருந்து டிரைவரின் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.