Categories
சினிமா தமிழ் சினிமா

மேலும் ஒரு அதிர்ச்சி…. ‘அபூர்வ சகோதரர்கள்’ பட நடிகர் காலமானார்…. சோகத்தில் திரையுலகம்…!!!

அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் நடித்த நடிகர் உயிரிழந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் 1989ஆம் ஆண்டு முன்னணி நடிகர் கமல் நடிப்பில் வெளியான ‘அபூர்வ சகோதரர்கள்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இத்திரைப்படத்தில் நடிகர் கமல் குள்ளமான நடிகராக நடித்திருப்பார். இதேபோல் இவருடன் சேர்ந்து உயரம் குறைந்த நடிகர்கள் சிலரும் நடித்திருப்பர்.

அதில் ஒருவராக இருந்த மேலா ரகு என்பவர் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி தனது வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார்.இதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இவரின் மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து பல்வேறு திரைப்பட பிரபலங்கள் மேலா ரகுவின் மறைவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |