ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள “கோமாளி” திரைப்படம் இன்று முதல் திரைக்கு வந்துள்ளது.
அடங்க மறு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள ‘கோமாளி’ திரைப்படம் இன்று முதல் வெளியாகிறது. கதாநாயகியாக நடிகை காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே இருவரும் நடித்துள்ளனர். இவர்களுடன் யோகிபாபு இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது ‘நண்பா நண்பா’ என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
வேல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த படம் வெளிவந்துள்ளது. மேலும் ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையில் ரிச்சர்ட் நாதன் ஒளிப்பதிவில் பிரதீப் ராகவ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் முழு நகைச்சுவை கொண்டதால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெரும் என நம்பப்படுகிறது.