ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்த தந்தையின் சடலம் எரியும் போது திடீரென அவரின் மகள் நெருப்பில் பாய்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தான் மாநிலத்தில் பார்மர் நகரில் தாமோதர்தாஸ் சார்தா குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியை இழந்து 3 மகள்கள் உள்ளனர். கொரோனா அதிகரித்து வரும் நிலையில், 73 வயதாகும் தாமோதர்தாஸ் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அன்று அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
இவரின் சடலத்தை மயானத்தில் எரித்த போது இவரின் இளைய மகள் சந்திரா யாரும் எதிர்பாராத விதமாக திடீரென அக்னிக்கட்டில் பாய்ந்துள்ளார். அங்கிருந்தவர்கள் உடனடியாக காப்பாற்றி அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். உடனடியாக காப்பாற்றபட்டாலும் 80 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. அதன்பின் மேல்சிகிச்சைக்காக ஜோத்பூர் நகர மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன.